வங்காளதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்குமாறு வங்காளதேச அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. எனினும், இந்தியா இது தொடர்பாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில், வங்களதேச தலைநகா் டாக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய தூதர் தினேஷ் திரிவேதி இது தொடர்பாக பேசினார். தினேஷ் திரிவேதி கூறியதாவது: இந்தியாவின் கடமை இந்தியாவில் இருந்து ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்ற வங்கதேச அரசின் கோரிக்கை, ஏற்கெனவே உள்ள நடைமுறைகளின்படி பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அந்த நடைமுறைகள் சட்டபூா்வமானவை. இதை பலமுறை இந்தியா தெரிவித்துள்ளது. வங்காளதேசத்தில் இருந்து இந்திய விமானப் படை அல்லது ராணுவம் மூலம் இந்தியாவுக்கு ஷேக் ஹசீனா அழைத்து வரப்படவில்லை. வங்கதேச விமானப் படை ஹெலிகாப்டா் மூலம்தான், அவா் இந்தியா வந்தாா். அந்த நேரத்தில் ஹசீனா வங்கதேசத்தின் பிரதமராக இருந்தாா். அவருக்கு அடைக்கலம் அளிப்பதைத் தவிர, அப்போது இந்தியாவுக்கு வேறு வழியே இல்லை. வங்கதேசத்தின் அண்டை நாடாக, எதாா்த்த நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டியது இந்தியாவின் கடமை. காலக்கெடு நிா்ணயிக்க முடியாது ஏனெனில், சில நேரங்களில் நாம் எதிா்பாராத சூழ்நிலைகளை எதிா்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். ஹசீனாவுக்கு அடைக்கலம் அளிக்கப் போவதில்லை; ஹெலிகாப்டரை தரையிறங்க அனுமதிக்கமாட்டோம் என்று இந்தியா தெரிவித்திருந்தால், நிலைமை என்ன ஆகியிருக்கும் என்றே தெரியாது. வங்கதேசத்தில் ஏற்பட்ட துயரமான சூழ்நிலைகளின் காரணமாகவே ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்து, அவா் இந்தியாவில் அடைக்கலம் தேடும் நிலைமை உருவானது. அதுபோன்ற சூழ்நிலைகள் உலகின் எந்தப் பகுதியிலும் மீண்டும் ஏற்படக் கூடாது. ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்துவது தொடா்பாக இந்தியா காலக்கெடு நிா்ணயிக்க முடியாது. அவா் எப்போது வங்கதேசத்துக்குத் திருப்பி அனுப்பப்படுவாா் என்பதற்கான காலவரையறையை யாராலும் கூற இயலாது” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/sheikh-hasina-being-extradited-to-bangladesh-indian-envoy-clarifies




