மும்பை, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 10 டன் பட்டாசுகளை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். பட்டாசு பறிமுதல் மகாராஷ்டிராவின் நவா சேவா துறைமுகத்தில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் சரக்குகளை அதிகாரிகள் சோதனை செய்து கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில், சந்தேகத்திற்கிடமான சரக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, உரிய அனுமதிகள் மற்றும் விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் பட்டாசுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 10 டன் பட்டாசுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.3 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பட்டாசுகள் அதிகளவில் இருப்பதுடன், அவை ஆபத்தான பொருட்கள் என்பதால் அவற்றை அங்கிருந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்வது பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என கருதப்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள் அனைத்தும் துறைமுக வளாகத்திலேயே அதிகாரிகளால் முழுமையாக அழிக்கப்பட்டன. விசாரணை சட்டவிரோதமாக பட்டாசுகள் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னணி, அவற்றை இறக்குமதி செய்தவர்கள் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து மகாராஷ்டிராவின் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தப் பட்டாசுகள் எந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டன, அவற்றை நாட்டிற்குள் கொண்டு வர முயன்றவர்கள் யார் என்பது உள்ளிட்ட விவரங்களையும் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/10-tons-of-crackers-worth-rs-3-crore-seized-at-nava-sewa-port




