ராணிப்பேட்டை, அரக்கோணம் அருகே கோவில் மண்டலாபிஷேக பூஜையின்போது ஏற்பட்ட புகை மூட்டத்தால் தேன்கூட்டில் இருந்து ஆயிரக்கணக்கான தேனீக்கள் வெளியேறி பக்தர்கள் மற்றும் பொதுமக்களை விரட்டி விரட்டி கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 48 நாள் மண்டலாபிஷேக பூஜை அரக்கோணம் அடுத்த வேடல் காந்திநகர் பகுதியில் இருசாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. புகை மூட்டத்தால் தேன்கூட்டில் இருந்து வெளியேறிய தேனீக்கள் இந்த நிலையில், நேற்று கோவில் வளாகத்தில் யாகம் தொடங்கி பூஜைகள் நடைபெற்றன. அப்போது யாகத்தில் இருந்து எழுந்த புகை அருகில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்த தேன்கூட்டின் மீது பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தேன்கூட்டில் இருந்த ஆயிரக்கணக்கான தேனீக்கள் திடீரென கூட்டைவிட்டு வெளியேறி, கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களை நோக்கி பாய்ந்தன. தலைதெறிக்க ஓடிய பக்தர்கள் தேனீக்கள் கூட்டமாக தங்களை நோக்கி வருவதைக் கண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும், தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியதாக கூறப்படுகிறது. இதில் கை, கால், மூக்கு, கழுத்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலருக்கு தேனீக்கடி ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 25-க்கும் மேற்பட்டோர் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர். தேன்கூட்டை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் இதுகுறித்து அரக்கோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் தேன்கூட்டை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோவில் பூஜையின்போது தேனீக்கள் கூட்டமாக வெளியேறி பக்தர்களை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/50-devotees-injured-in-bee-attack-at-a-temple-near-arakkonam




