பிரவீன் விஜய் இயக்கத்தில் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் வரும் நவம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது. கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‘சத்யவான் சாவித்திரி’. பிரவீன் எஸ். விஜய் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு எதிராக வாதிடும் வழக்கறிஞராக மிஷ்கின் நடித்துள்ளார். இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்துள்ளார். முதல் பாடல் வெளியீடு மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்யவான் சாவித்திரி’ படத்தின் முதல் பாடலான ‘ரிப்பிப்பீ’ வெளியாகி வைரலானது. தாமதம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து ஜூலை மாதம் 24-ந்தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தவிர்க்க முடியாத காரணங்களால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு இந்த நிலையில், ‘சத்யவான் சாவித்திரி’ படம் வருகிற நவம்பர் மாதம் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வித்தியாசமான கதைக்களம் மற்றும் கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் கூட்டணி காரணமாக, இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. NO MORE SILENCE. SAVITHIRI’S FIGHT BEGINS! இனி மௌனம் இல்லை. சாவித்திரியின் போராட்டமே! ఇక మౌనం లేదు. సావిత్రి పోరాటమే! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/keerthy-sureshs-sathyavan-savithiri-new-release-date-announced



