சென்னை, நடிகர் ரவி மோகன் முதன்முறையாக இயக்கித் தயாரிக்கும் 'ஆன் ஆர்டினரி மேன்' திரைப்படத்திற்கு பாடகியும், ரவிமோகனின் தோழியுமான கெனிஷா இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், ஜெயம், தனி ஒருவன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். தற்போது ரவி மோகன், கராத்தே பாபு, பென்ஸ், ப்ரோ கோட் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில், தனது நீண்டநாள் கனவை நனவாக்கும் வகையில் 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். யோகி பாபுவை வைத்து இயக்கும் 'ஆன் ஆர்டினரி மேன்’ தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக 'ஆன் ஆர்டினரி மேன்' என்ற திரைப்படத்தை ரவி மோகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை மையமாக கொண்ட கதையாகும். காமெடியும் எமோஷனலும் கலந்த கதை இது. குறுகிய கால தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியிருக்கிறது. கெனிஷா இசையமைக்கிறாரா? நடிகர் ரவி மோகன் முதன்முறையாக இயக்கித் தயாரிக்கும் 'ஆன் ஆர்டினரி மேன்' திரைப்படத்திற்கு பாடகியும், ரவிமோகனின் தோழியுமான கெனிஷா இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்திரைப்படத்திற்கு முதலில் வேறு ஒரு இசையமைப்பாளர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது பாடகி கெனிஷா இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/is-kenisha-composing-music-for-a-ravi-mohan-film-new-information-circulating-online



