ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரத்தில் உள்ள ஹனுமான் நகர் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் மயங்க்(வயது 16), செல்போனில் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மயங்க் தனது செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த அவரது தந்தை மயங்கை கண்டித்ததாக தெரிகிறது. ஆனால் மயங்க் அதை கேட்காமல் தொடர்ந்து செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததால் கோபமடைந்த அவரது தந்தை, செல்போனை அவரிடம் இருந்து பிடுங்கியுள்ளார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான மயங்க், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரது உடல்நிலை மோசமானதையடுத்து, குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மயங்க் உயிரிழந்தார். உயிரிழந்த மயங்க் அவரது பெற்றோருக்கு ஒரே மகன் ஆவார். அவரது தந்தை சவுத்மால் ஒரு இதய நோயாளி. தனது மகன் எடுத்த விபரீத முடிவால் மனமுடைந்து போன சவுத்மாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/father-reprimands-son-for-playing-video-games-on-mobile-phone-class-11-student-commits-suicide




