சென்னை, புலன் விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்துவதாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, விசாரணைக்கு அழைக்கப்படுபவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. சென்னை ஐகோர்ட் புலன் விசாரணை என்ற பெயரில் தன்னை போலீசார் துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், “விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிடக்கோரி ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. போலீசாரின் புலன் விசாரணையில் பொதுவாக ஐகோர்ட்டு தலையிடுவதில்லை. அதேநேரம் புலன் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதை கண்டுகொள்ளாமல் இருக்கவும் முடியாது. விதிமுறை எனவே, கீழ்கண்ட விதிமுறைகளை உருவாக்குகிறேன். விசாரணைக்கு அழைக்கப்படுபவருக்கு முறையாக சம்மன் அனுப்ப வேண்டும். அதில் எந்த தேதியில், எந்த நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என குறிப்பிட வேண்டும். விசாரணை நடவடிக்கைகளை, போலீஸ் நிலைய குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டும். விசாரணைக்கு அழைக்கப்படும் யாரையும் துன்புறுத்தக்கூடாது" என்று உத்தரவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/no-harassment-under-the-guise-of-investigation-high-court-orders-formulation-of-guidelines




