இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந் தது. இதையடுத்து அவர் பதவி விலகக்கோரி, காந்தி ஜெயந்தி தினமான நேற்று மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் பிர மாண்ட போராட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி மற்றும் சட்டமேதை அம்பேத்கர் ஆகியோரின் படங்களுக்கு மரியாதை செலுத்தி, அகிம்சை வழியில் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் திப்கே தலைமை தாங்கினார்.நடிகர்கள் நசிருதீன் ஷா, ஷபானா ஆஸ்மி, பிரபல திரைப்பட இயக்குனர்கள் விஷால் பரத்வாஜ், ஹன் சல் மேத்தா, பிரபல இசையமைப்பாளர் விஷால் தத்லானி மற்றும் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி ஆகியோர் நேரில் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். சினிமா வசனங்கள் போராட்டத்தில் பங்கேற்க வந்த இந்தி நடிகை ஷபானா ஆஷ்மி.போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாண வர்கள் மற்றும் இளைஞர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர். அதில் மராத்தி மற்றும் இந்தி சினிமா வசனங்களை மாற்றி, "ஞானு, உங்க ளுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லையா?” உள்பட பல்வேறு வாசகங் கள் அடங்கிய மீம்ஸ் பதாகைகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். சயான் பகுதியை சேர்ந்த மனிஷ் மண்டல் என்ற மாணவர், மெலோடி சாக்லெட் ரேப்பர்களால் செய்யப்பட்ட நகைகளை அணிந்து வந்து, தேர்தல் முறைகேடு தொடர்பாக கேலி வாசகம் அடங்கிய போஸ்டரை ஏந்தி அனைவரின் கவனத்தை யும் ஈர்த்தார்.புனேயில் இருந்து வந்திருந்த மாணவர்கள் இசைக்கருவிகளை வாசித்தப்படி "வேண்டாம். வேண்டாம். முறைகேடு வேண்டாம், வெளியேறு. வெளியேறு. ஞானேஷ் குமாரே வெளியேறு” என சிவாஜி பூங்கா அதிரும் வகையில் முழக்க மிட்டனர். மும்பை குலுங்கியது மாலை 4 மணிக்கு தொடங்கிய போராட்டத்திற்கு, மதியமே ஆயிரக்கணக்கா னோர் திரள தொடங்கியதால், மும்பை போலீசார் தாதர் மற்றும் சேனா பவன் பகுதிகளில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை முழுமையாக முடக்கினர். தாதர் ரெயில் நிலையத்திலும் நூற்றுக்கணக்கான ரிசர்வ் படை போலீசார் குவிக் கப்பட்டனர்.இருப்பினும், போலீசாரின் அத்தனை கட்டுப்பாடுகளையும், தடுப்புகளையும் உடைத்துக்கொண்டு இளைஞர்கள் முன்னேறினர். போலீசாரால் அவர்களை தடுக்க முடியவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்ட களத்தில் திரண்ட இளைஞர் பட்டாளம், தங்களது கோரிக்கைகளை அதிரடியாக முழங்கி னர். இந்த போராட்டத்தால் மும்பை சிவாஜி பார்க் பகுதி குலுங்கியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/cockroach-janata-party-protest-in-mumbai-commotion-as-youths-break-through-barricades-and-advance



