குஜராத்தில் உள்ள சூரத்தில் ஷ்யாம் சங்கினி ஜவுளி சந்தை என்கிற சந்தை இருக்கிறது. அங்கே உள்ள 639-ம் எண் கடையில், கடந்த ஏப்ரல் மாதம் வினோத் பண்டிட் சாவ்லே கணக்காளராகச் சேர்ந்துள்ளார். ஆனால், அந்த வேலை அவருக்குச் செட் ஆகாததால் ஜூன் மாதமே வேலையை விட்டு நின்றுவிட்டார். ஆனால், அவருக்கு அந்தக் கடையில் உரிமையாளர் ரூ.10,000 சம்பளப் பாக்கி தர வேண்டியிருந்திருக்கிறது. இது வினோத்திற்குக் கிடைக்கவில்லை. இதனால், அந்த உரிமையாளருக்குப் பாடம் புகட்டத் திட்டமிட்டிருக்கிறார் வினோத். ஷ்யாம் சங்கினி ஜவுளி சந்தைசாதி பாகுபாட்டால் IIT Bombay மாணவர் தற்கொலை; "அவனிடம் நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது" - தந்தை இதையடுத்து, அருகிலுள்ள கிராமம் ஒன்றின் பெட்ரோல் பங்கில் ரூ.150-க்கு பெட்ரோல் வாங்கிவிட்டு, செப்டம்பர் 8-ம் தேதி இரவு 8-9 மணிக்கு ஷ்யாம் சங்கினி ஜவுளி சந்தைக்கு வந்திருக்கிறார். ஆள் நடமாட்டம் குறைந்ததும் நள்ளிரவு 12 மணிக்கு முகத்தை வெள்ளைத் துணியால் மறைத்துக்கொண்டு, தான் வேலை பார்த்த கடைக்குச் சென்றிருக்கிறார். அங்கே வெளியே வைக்கப்பட்டிருந்த துணிப்பைகள், துணிமூட்டைகள் மீது பெட்ரோல் ஊற்றிப் பற்றவைத்துள்ளார். அது சந்தை என்பதால் அருகருகே கடை அமைந்திருக்கிறது. தீப் பற்றிய உடனே, பக்கத்துக் கடைகளுக்கும் அது பரவியுள்ளது. இதில் 14 கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இது விபத்து என்றுதான் நினைக்கப்பட்டது. ஆனால், சிசிடிவியை ஆராய்ந்தபோது, வினோத்தின் செயல் தெரியவந்திருக்கிறது. இந்தத் தீ விபத்தினால் ரூ.24 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.வினோத் தேடப்படுகிறார் என்று தெரிந்ததும் அவர் அவரது குடும்பத்துடன் ராஜஸ்தான், அயோத்தி எனத் தலைமறைவாகியிருக்கிறார். பின்னர், அவர் மீண்டும் சூரத் திரும்பியபோது வினோத்தைக் கைது செய்திருக்கின்றனர் சூரத் போலீசார். மேலும், வினோத்திற்குப் பெட்ரோல் பங்க் விதிமுறைகளின்படி தான் பெட்ரோல் வழங்கியதா என்பதையும், இந்தச் சம்பவத்தில் வேறு யாராவது சம்பந்தம் உள்ளதா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பாசிட்டிவ் ரூட்டில் ஈரான் போர் நிறுத்தம்? 'நவம்பருக்கு பின் ஒப்பந்தம்' - ட்ரம்ப் சொன்ன தகவல்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/10000-salary-dispute-leads-to-24-crore-surat-fire




