புதுடெல்லி, வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்த மாதம் இறுதியில் இருந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற் றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளை யாடுகிறது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடும் இந்திய கிரிக்கெட் அணி தேர்வு டெல்லியில் இன்று நடக்கிறது. அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி ஆலோ சித்து அணியை அறிவிக்கின்றனர். அகர்கரின் பதவிகாலம் அடுத்த மாதம் தொடக்கத்தில் முடிவடைகிறது. அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படாவிட்டால் அவரது தலைமையில் நடைபெறும் கடைசி தேர்வு குழு கூட்டமாக இதுவே இருக்கும். சுப்மன் கில் தலைமையிலான ஒருநாள் போட்டி அணியில், காயம் காரணமாக ஐ.பி.எல்.-க்கு பிறகு எந்தவொரு போட்டியிலும் களம் காணாத ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நேரடி யாக இந்த தொடரில் கால் பதிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த வாரம் நடக்கும் உடல்தகுதி சோதனையில் அவர் தேறி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் முக்கியமான வீரர் என்பதால் அவசரகதியில் அணிக்கு கொண்டு வந்து, மீண்டும் காயப்பிரச் சினை வந்து விடக்கூடாது என்பதில் தேர்வு குழு கவனமாக உள்ளது. அதே நேரத்தில் ஆல்-ரவுண்டர்கள் நிதிஷ்குமார் ரெட்டி, அக்ஷர் பட்டேல், ஷிவம் துபே. வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆசிய போட்டிக்கு செல்வதாலும், சூர்யான்ஷ் ஷெட்கே. வெங் கடேஷ் அய்யர் காயத்தில் இருந்து மீளாததாலும் பாண்ட்யாவை சேர்ப்பது குறித்து தேர்வு குழு பரிசீலிக்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/odi-series-against-west-indies-indian-squad-to-be-announced-today




