ராமநாதபுரம், இல்லம் தேடி மதுவை கொண்டு வந்தவர் ஸ்டாலின் என்று திமுக நிர்வாகி பேசிய சம்பவம் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆர்ப்பாட்டம் தமிழக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை விமர்சித்து பேசியிருந்தார். இதையடுத்து, மு.க.ஸ்டாலினை இழிவுபடுத்திவிட்டதாகக்கூறி முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இல்லம் தேடி மதுவை கொண்டு வந்தவர் ஸ்டாலின் அந்த வகையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாவட்ட செயலாளரும், ராமநாதபுரம் திமுக எம்.எல்.ஏ.வுமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகி, ’இல்லம் தேடி மதுவை கொண்டு வந்தவர் ஸ்டாலின்’ என்று பேசினார். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அதன்படி, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக மகளிர் அணி மாவட்ட துணைச்செயலாளர் பவுசியா பானு கட்சியினர் மத்தியில் பைக்கில் பேசுகையில், இல்லம் தேடி கல்வியை தந்தவர் முதல்-அமைச்சர். இன்று இல்லம் தேடி மதுவை கொண்டுவந்தவர் ஸ்டாலின்’ என்று கோஷம் எழுப்பினார். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், சுதாரித்துக்கொண்ட பவுசியா பானு, விஜய் அவர்கள் என்று திருத்திக்கூறினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/stalin-brought-liquor-home-dmk-functionary-remark-sparks-row




