குளித்தலை, சிறுவர்கள் மூலம் மோட்டார் சைக்கிள்களை திருடிய பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குளித்தலை கோர்ட்டு உத்தரவிட்டது. மோட்டார் சைக்கிள் திருட்டு கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர்கள் அரவிந்த் (வயது 22), சிவக்குமார் (43). இவர்களுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டன. இதுகுறித்து இருவரும் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அந்த வாகனங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சிறுவர்களை பயன்படுத்தி. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த மதனின் மனைவி ஜோதி (38) என்பவர் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும், சிறுவர்களிடம் மோட்டார் சைக்கிள்களை திருடி வருமாறு அனுப்பியதும், அவ்வாறு திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஜோதியை குளித்தலை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கு குளித்தலை குற்றவியல் நீதித்துறை நடுவர் எண். 2 கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 2 ஆண்டுகள் சிறை தண்டனை இந்த வழக்கின் இறுதி விசாரணை குளித்தலை கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில், ஜோதியின் குற்றச்செயல் அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இரு வழக்குகளிலும் ஜோதி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் அவருக்கு தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, குளித்தலை குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2 நீதிபதி சசிகலா தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து தண்டனை பெற்ற ஜோதியை குளித்தலை போலீசார் கைது செய்து, திருச்சி மகளிர் தனிச்சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-who-stole-motorcycles-using-children-court-imposes-2-year-prison-sentence




