ஒரு பக்கம் 12-ஆம் வகுப்புப் படிப்பு. இன்னொரு பக்கம் AI நிறுவனம், புதிய தொழில்நுட்பக் கருவிகள், உலகம் முழுவதும் பயிற்சி என பிஸியாக இயங்கி வருகிறார் கேரளாவைச் சேர்ந்த 16 வயது மாணவன் ராவுல் ஜான் அஜூ. AI துறையில் இவரது செயல்பாடுகளால், “AI Kid of India” என்ற அடையாளமும் கிடைத்திருக்கிறது. கொச்சி குன்னம்புரத்தில் உள்ள North Edappally GHSS பள்ளியில் வணிகவியல் பிரிவில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் ராவுலுக்கு, சிறுவயதிலேயே தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக Video Editing மூலம் தொழில்நுட்ப உலகுக்குள் வந்தவர், 9 வயதில் Artificial Intelligence குறித்து தானாகவே கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார். அவரது தந்தைக்கு Adobe நிறுவனத்தில் வேலை கிடைத்தபோது, அங்கிருந்த Premium Tools-ஐ இலவசமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு ராவுலுக்கு கிடைத்திருக்கிறது. அந்த அனுபவத்தைத் தொடர்ந்து AI மீது தீவிரமாக கவனம் செலுத்தியவர், பள்ளி அறிவியல் திட்டத்திற்காக ‘MeBot’ என்ற Robot-ஐ உருவாக்கியிருக்கிறார். இன்று அந்த ஆர்வம் Startup ஆக வளர்ந்திருக்கிறது. ராவுல் நடத்தும் AI Technologies நிறுவனத்தில் சுமார் 15 பேர் பணியாற்றுகின்றனர். இதில் அவரது தந்தையும் ஒருவர். அவருக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. இது குறித்து ராவுல் கூறுகையில், “என் கைபேசி மூலம் எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், என் அப்பாவின் அனுபவத்தை அப்படிக் கற்றுக்கொள்ள முடியாது. அவர் Amazon, Adobe, Wipro, IBM உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவே அவரை நிறுவனத்தில் இணைத்தேன். அதேநேரம், இது எனது சந்தைப்படுத்தலுக்கும் உதவியாக இருந்தது” என தெரிவித்துள்ளார். AI Kid of India அவரது நிறுவனம் நடத்தும் ThinkCraft Academy மூலம் IIT, IIM, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் Corporate நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு, கைபேசியில் Game விளையாடுவது போல எளிதாக AI திறன்களை கற்றுக்கொள்ளும் வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதுவரை உலகம் முழுவதும் சுமார் 5 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் RESQ AI, MeBot, ZapGap, Investo AI, FeedFye உள்ளிட்ட 15 AI Tools-ஐ உருவாக்கியுள்ளார். இவை நிஜ வாழ்க்கைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை. உலகின் பல்வேறு பகுதிகளில் Remote Employees-ஐ கொண்டுள்ள இந்த இளம் தொழில்முனைவோரின் AI பயணம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/trending/indias-ai-kid-of-india-16-year-old-boy-from-kochi-pays-his-father-rs-2-lakh-as-monthly-salary




