சென்னை சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மஞ்சள் வழித்தடத்தில் விரைவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி இந்த வழித்தடத்துக்கான பயணக் கட்டணத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ரூ.10 முதல் ரூ.40 வரை பூந்தமல்லி-வடபழனி இடையேயான சுமார் 14.6 கிலோமீட்டர் தொலைவிலான உயர்மட்ட மெட்ரோ ரெயில் பாதையில், பயண தூரத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.40 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பூந்தமல்லியில் இருந்து பூந்தமல்லி பெருவழிச்சாலை வரை ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். பூந்தமல்லி அரசு மருத்துவமனை, கரையாஞ்சாவடி, குமணன்சாவடி மற்றும் காட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு ரூ.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அய்யப்பன்தாங்கல், தெள்ளியரகரம், போரூர் மூலைக்கடை மற்றும் போரூர் சந்திப்பு ஆகிய பகுதிகளுக்கு பூந்தமல்லியில் இருந்து செல்ல ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படும். பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை பயணம் செய்ய அதிகபட்சமாக ரூ.40 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் சேவை தொடக்கம் பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ வழித்தடத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்ததும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த வழித்தடம் திறக்கப்பட உள்ளது. இந்த புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதன் மூலம் மேற்கு சென்னை பகுதிகளில் இருந்து நகரின் மையப்பகுதிக்கு செல்லும் பயணிகளின் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் 11-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி நேரில் அல்லது காணொலி வாயிலாக இந்த மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/poonamalli-vadapalani-metro-rail-fare-fixation




