முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். Jana Nayagan - Vijay படத்தின் ரிலீஸையொட்டி நம் 'சினிமா விகடன்' யூடியூப் சேனலுக்கு அ. வினோத் பேட்டியளித்திருக்கிறார். இந்தப் பேட்டியில் 'ஜன நாயகன்' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் பெற்றது குறித்து பேசியிருக்கிறார். "விஜய்யின் வெற்றிக்கு குழந்தைகள் முக்கியப் பங்காக இருந்திருக்கிறார்கள் என்பதை அவரே சொல்கிறார். படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்திருப்பதால் குழந்தைகளால் படத்தைப் பார்க்க முடியாது. இது படக்குழுவினருக்கு வருத்தத்தைக் கொடுக்கிறதா?" எனக் கேட்டோம். பதில் தந்தவர், "குழந்தைகள் எப்போதும் விஜய் சார் படத்தைப் பார்க்க வருவார்கள். இம்முறை அதை மிஸ் செய்வேன். சென்சார் கிடைப்பதே பெரிய விஷயமாக இருந்தது. அதில் அவர்கள் 'ஏ' சான்றிதழ்தான் கொடுக்க முடியும் எனச் சொல்லும்போது, அதனை மறுத்துப் பேச முடியவில்லை. Jana Nayagan - Vijay பிறகு தயாரிப்பாளரிடம் பேசி 'ஏ' சான்றிதழ் பெற்றுக்கொண்டோம். இதில் விஜய் சார் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் வருத்தம்தான். அனிருத் மிகப்பெரிய உழைப்பாளி. மிக வேகமாக வேலையை முடித்துவிடுவார். அவர் மாஸ் மியூசிக் டைரக்டர். மாஸ் ஹீரோக்களுக்கு இசை அமைக்கும் இசையமைப்பாளர்கள் இந்தியாவில் குறைவு. ஆனால், அனிருத் எல்லா நேரங்களிலும் சர்ஃப்ரைஸ் செய்கிறார்" என்றார். Jana Nayagan Exclusive: "நிறைய பேர் 'ஜன நாயகன்' படத்தைப் பார்த்துவிட்டார்கள்; ஆனால்." - அ. வினோத் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/h-vinoth-interview-vijay-movie-censor-a-certificate-anirudh-music




