தொல்லியல் ஆய்வு மனிதர்கள் முதலில் பயிரிட்ட பழம் எது என்ற கேள்விக்கு பலரும் 'வாழைப்பழம் என்றுதான் பதில் சொல்வார்கள். ஆனால், தொல்லியல் ஆய்வுகள் சொல்வது வேறு கதை. உலகின் மிகவும் பழமையான பழம் என்ற பெருமை அத்திப்பழத்திற்கே உரியது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கடந்த 2006-ம் ஆண்டு, இஸ்ரேலில் உள்ள ஜெரிகோ நகருக்கு அருகே அமைந்துள்ள கில்கால் என்ற தொன்மையான கிராமத்தில், சுமார் 11,200 முதல் 11,400 ஆண்டுகள் பழமையான ஒன்பது புதைபடிவ அத்திப்பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம், மனிதர்கள் விவசாயத்தைத் தொடங்கிய ஆரம்பகாலத்திலேயே அத்திப்பழத்தைப் பயிரிட்டு உண்டது உறுதியாகியுள்ளது. இயற்கை பொக்கிஷம் இயற்கையாகவே இனிப்புச்சுவை கொண்டுள்ளதோடு, எளிதாக உலர்த்தி நீண்ட நாட்கள் பாதுகாத்து வைத்திருக்க முடிவதன் காரணமாக, பண்டைய எகிப்தியர்கள், கிரேக்கர்கள் மற்றும் மத்திய கிழக்கு மக்களின் உணவுப் பழக்கத்தில் அத்திப்பழம் முக்கிய இடம் பிடித்திருந்தது. நீண்ட பயணங்களுக்குக் கூட இதை உலர்த்தி எடுத்துச் சென்றதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. வரலாற்றில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் அத்திப்பழம் தனி முத்திரை பதிக்கிறது. 11 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களின் உணவுத் தட்டில் இடம்பிடித்துள்ள அத்திப்பழம், உலகின் மிகப் பழமையான பழம் மட்டுமல்ல. காலத்தைக் கடந்த ஒரு இயற்கை பொக்கிஷம் என்றே சொல்லலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/there-is-no-banana-so-what-is-the-oldest-fruit-in-the-world




