சாத்தான்குளம், கொம்மடிக்கோட்டை வாலைகுரு சுவாமி கோவில் வருசாபிஷேக விழாவின் ஒரு பகுதியாக 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை வாலைகுரு சுவாமி கோவிலில் வருசாபிஷேக விழா நடந்து வருகிறது. இதையொட்டி கடந்த 12-ந் தேதி பரிவார மூர்த்திகளுக்கும், 13-ந் தேதி மூல மூர்த்திகளுக்கும் வருசாபிஷேகம் நடைபெற்றது. 1,008 திருவிளக்கு பூஜை விழாவில் 8-ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு பூஜை நடந்தது. 11 மணியளவில் சிறப்பு அபிஷேகம், 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.45 மணிக்கு சாயராட்சை நடந்தது. மாலை 6 மணியளவில் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக துணைத்தலைவர் அசோக் குமார் மனைவி வனிதா கலந்துகொண்டு விளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். விளக்கு பூஜையைத் தொடர்ந்து சந்திரசேகரர், மனோன்மணி அம்பாள் சமேதராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பால்குடம் ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) காலையில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. நாளை (செவ்வாய்க்கிழமை) பகலில் பக்தர்கள் சந்தன குடம் ஏந்தி கோவில் பிரகாரம் சுற்றி வருதல், இரவில் சுவாமி உற்சவ விநாயகர் சின்ன சப்பரத்திலும், சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்திலும் ரதவீதியில் உலா வருதல் ஆகியவை நடக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/sathankulam-1008-thiruvilakku-puja-at-kommadikottai-valaiguru-swami-temple




