துஷ்யந்த், ஜனனி நடிக்கும் ‘ஆல் பாஸ்’ படம் வரும் 18ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா தயாரித்துள்ள படம் ஆல் பாஸ். இந்த படத்தில் நடிகர் துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி ‘லியோ’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா,ஆர், சத்யா மற்றும் சஞ்சய், கோகுல், நிகில் மூவரும் பெயர் சொல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் மைதீன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ‘ஆல் பாஸ்’ படத்தை இயக்கியுள்ளார். பேமிலி சென்டிமென்ட் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்த படம் வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை பற்றி பேசுகிறது. ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்வரிகளை எழுதியுள்ளார் வடசென்னையை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டிருப்பதால் 45 நாட்கள் முழு படப்பிடிப்பையும் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலேயே படமாக்கப்பட்டுள்ளது. பகை வன்முறை இல்லாத வடசென்னையில் வாழும் மூன்று குடும்பங்கள் பாசம், நட்பு, சந்தோஷம், துக்கம் என்று வாழ்க்கையை அவர்களது போக்கில் வாழ்கிறார்கள் ஆனால் இயற்கை அவர்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறது, அது என்ன டெஸ்ட் அதில் பாஸ் ஆனார்களா இல்லையா என்பதே இந்த படத்தின் திரைக்கதை. குடும்ப உணர்வுகளை சினிமாவில் சொல்லிய அனைத்து படங்களும் பெரிய வெற்றி பெற்றுள்ளது அந்த வரிசையில் இந்த ஆல் பாஸ் படமும் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் இயக்குனர் மைதீன். இந்நிலையில், துஷ்யந்த், ஜனனி நடிக்கும் ‘ஆல் பாஸ்’ படம் வரும் 18ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dushyanths-all-pass-film-release-date-announced




