டோக்கியோ, மழை காரணமாக ஆட்டம் 5 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் இந்தியா 32 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா - ஜப்பான் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் ஒரேஒரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இந்தியா, ஜப்பான் இடையேயான தூதரக உறவு ஏற்பட்டு 75 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதை கொண்டாடும் வகையில் இருநாடுகளுக்கும் இடையே இந்த டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா - ஜப்பான் கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறும் முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இதுவாகும். டாஸ் ஜப்பானின் டொஷிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 5 ஓவர்கள் மழை காரணமாக இப்போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்தியா 32 ரன்கள் அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் 9 ரன்னிலும், அபிஷேக் சர்மா (0) ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர். இஷான் கிஷன் 3 ரன்னிலும், கேப்டன் ஷ்ரேயாஸ் 16 ரன்னிலும் அவுட் ஆகினர். திலக் வர்மா 1 ரன்னிலும், ஷிவம் துபே ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். ஜப்பான் தரப்பில் அந்த அணியின் சார்லி 2 விக்கெட்டுகளையும், இப்ராகிம், பெஞ்சமின் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 5 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி ஜப்பான் களமிறங்கி விளையாட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/t20-potti-jappanukku-savalan-ilakku-nirnayiththa-indiya




