வேலூர் மாவட்டம், காட்பாடி உட்கோட்டத்துக்கு உட்பட்ட விருதம்பட்டு காவல் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு உள்ளது. இந்த வீட்டில் நம்பத் தகுந்த பணியாட்களாக வேலூர் அருகேயுள்ள ஊசூரைச் சேர்ந்த ராணி (வயது 52) மற்றும் இவரின் மகள் மகாலட்சுமி (37) ஆகியோர் வேலைச் செய்து வந்தனர். சேகர் ரெட்டி தொழில் நிமித்தமாகப் பெரும்பாலும் சென்னையில்தான் தங்கியிருப்பார். இதனால், பணிப்பெண்கள் இருவரும் வீட்டைக் கவனித்துகொள்வார்களாம். சேகர் ரெட்டி சில தினங்களுக்கு முன்பு சேகர் ரெட்டியின் மகள் திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடு பணிகளில் அவர் கவனம் செலுத்தி வந்ததால் காட்பாடி பக்கம் வராமலிருந்தாராம். இந்த நிலையில்தான் சேகர் ரெட்டியின் காட்பாடி வீட்டில் இருந்து கிலோ கணக்கிலான பல கோடி ரூபாய் தங்கக்கட்டிகளும், நகைகளும், பல லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும் திருடுபோனதாக அவருக்குத் தெரியவந்தது. இது சம்பந்தமாக, சேகர் ரெட்டியின் மேலாளராக அறியப்படும் சந்திரசேகர் என்பவர் விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பணிப்பெண்களான தாய், மகளுக்கும் இந்தத் திருட்டுச் சம்பவத்தில் தொடர்பிருப்பதாகத் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்த போலீஸார் அவர்களிடமிருந்து சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கக்கட்டிகள், ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்தைக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணைக்குப் பின்னர் இருவரையும் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்திருக்கின்றனர் விருதம்பட்டு போலீஸார். கைது செய்யப்பட்ட தாய், மகள் இந்தத் திருட்டு வழக்கில், மேலும் சிலருக்குத் தொடர்பிருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. அதில் ஒருவர் மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) பிரிவில் டெல்லியில் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. பணிப்பெண்களில் மகாலட்சுமிக்கு வேண்டப்பட்டவர் எனப் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்தத் திருட்டு சதித் திட்டமும் ஒரே நாளில் முடிவு செய்யப்பட்டு நடத்தப்படவில்லையாம். ஒருசில மாதங்களாகவே லாக்கர் அறையில் இருந்து தங்கமாகவும், பணமாகவும் அள்ளிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பி.எஸ்.எஃப் வீரரும் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்துள்ளார். அவருடன் சேர்ந்து சில சொத்துகளையும் புதிதாக வாங்கியுள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக, இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து போலீஸார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில்தான் தாயும், மகளும் பிடிபட்டிருக்கின்றனர். சுமார் 12.5 கிலோ தங்கம் திருடு போயிருப்பதாகத் தகவல்கள் வந்துக்கொண்டிருப்பதால், போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ”டூவீலரில் 229 கிலோ மீட்டர், திருட்டு நகையில் ஜாலி டூர்”- செயின் பறித்த நண்பர்கள் சிக்கியது எப்படி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/gold-worth-crores-stolen-from-industrialist-sekar-reddy-home




