சென்னை குரூப்-1 முதல்நிலை தேர்வில் 57 ஆயிரத்து 612 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். 2 மாதங்களில் தேர்வு முடிவு வெளியிடப்படும். 46 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் குரூப்-1 பணியிடங்களில் 12 துணை கலெக்டர், 2 வணிகவரி உதவி ஆணையர், 3 கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர், 8 தமிழ்நாடு பதிவு பணி மாவட்ட பதிவாளர், ஒரு தொழிலாளர் உதவி ஆணையர் என 26 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி வெளியிடப்பட்டது. ஜூலை 29 ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கிடையில் குரூப்-1 பணியிடங்களில் மேலும் 20 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டன. இதன் மூலம் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது. குரூப்-1 முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு பட்டதாரிகள் போட்டிப்போட்டு விண்ணப்பித்தனர். முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் விண்ணப்பித்ததில் 95 ஆயிரத்து 984 ஆண்கள், 1 லட்சத்து 27 ஆயிரத்து 441 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 15 பேர் என 2 லட்சத்து 23 ஆயிரத்து 440 பேர் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் குரூப்-1 முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 754 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் 128 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வை 1 லட்சத்து 65 ஆயிரத்து 828 பேர் எழுதினர். சதவீத அடிப்படையில் இது 74.22 சதவீதமாகும். தேர்வு எழுத வராமல் 57 ஆயிரத்து 612 பேர் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். இது 25.78 சதவீதமாகும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், முதன்மை தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 2 மாதங்களில் முடிவு தேர்வு முடிவு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் எஸ்.கே.பிரபாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், குரூப்-1 முதல்நிலை தேர்வின் முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும். முழுமையான தேர்வு முடிவுகள் வெளியாகும்போது கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/group-1-preliminary-exam-57612-candidates-absent-results-in-2-months



