புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள 3 முக்கிய பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம நபர்கள் மின்னஞ்சல் வாயிலாக இன்று மிரட்டல் விடுத்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனிடையே காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய்களின் உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான மின்னஞ்சலை அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/bomb-threats-to-three-schools-in-delhi-students-evacuated




