சென்னை, பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் முக்கிய இடங்களில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம் நிறுத்தம் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னையில் நாளை மறுநாள் (13.08.2026) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். கே.கே. நகர்: காவேரி ரங்கன் நகர், கே.கே.சாலை, லோகையா காலனி, தசரதபுரம், ஆற்காடு சாலை, பாலாஜி நகர், பாஸ்கர் காலனி, மதியழகன் நகர், அருணாச்சலம் சாலை, குமரன் காலனி, காந்தி நகர், தேவராஜ் நகர், எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் சாலை, பரணி காலனி, காவேரி மருத்துவமனை தெரு, சூர்யா தெரு, 80 அடி சாலை, எம்.ஜி. சக்கரபாணி தெரு, பிக் பஜார், பாஸ்போர்ட் அலுவலகம், என்.எஸ்.கே. லேன், சியாமளா டவர், முனுசாமி தெரு, கஸ்தூரி தெரு, விநாயகம் தெரு, காமராஜர் சாலை, வெங்கடேச நகர். பாலவாக்கம்: காமராஜர் சாலை பிரதான சாலை, கரீம் நகர், மகாத்மா காந்தி நகர், சங்கம் காலனி 1வது மற்றும் 2வது தெரு, கந்தசாமி நகர் 1 வது முதல் 7வது தெரு வரை, மணியம்மை தெரு, திருவான்மியூர் அவ்வை நகர், வெங்கடேசபுரம், கண்ணப்பன் நகர், பாரதி நகர். பல்லாவரம்: பம்மல் பிரதான சாலை, ஆடுத்தொட்டி, கிருஷ்ணா நகர், முத்தமிழ் நகர், என்.எஸ்.கே. தெரு, நடராஜன் தெரு, பிருந்தாவன் காலனி, கென்னடி தெரு, மூங்கலேரி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-public-power-outage-in-chennai-the-day-after-tomorrowdo-you-know-which-areas-are-affected




