டமாஸ்கஸ், மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு சிரியா. இந்நாட்டின் அதிபராக 1970 முதல் 2000ம் ஆண்டு வரை ஹபீஸ் அல் அசாத் செயல்பட்டார். பஷீர் அல் அசாத் இதையடுத்து அவரது மகன் பஷீர் அல் அசாத் 2000ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை சிரியாவின் அதிபராக செயல்பட்டார். இதனை தொடர்ந்து அந்நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சி, உள்நாட்டு போரால் பஷீர் அல் அசாத்தின் ஆட்சி கவிழ்ந்தது. அவர் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதனிடையே, பஷீர் அல் அசாத்தின் ஆட்சி காலத்தில் 14 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டு போரில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பஷீர் அல் அசாத் ரஷியா தப்பிச்சென்ற நிலையில் சிரியாவின் புதிய அதிபராக அகமது அல் ஷெரா செயல்பட்டு வருகிறார். அதேவேளை, முன்னாள் அதிபர் அல் அசாத்திற்கு எதிராக போர் குற்றங்கள் குறித்து வழக்கு தொடரப்பட்டது. மனித குலத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுதல், போர் குற்றங்களில் ஈடுபடுதல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பஷீர் அல் அசாத் மீது விசாரணை நடைபெற்று வந்தது. மரண தண்டனை இந்நிலையில், இந்த வழக்கில் சிரியா முன்னாள் அதிபர் பஷீர் அல் அசாத்திற்கும் அவரது சகோதரருக்கும் டமாஸ்கஸ் கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது. மனித குலத்திற்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பஷீர் அல் அசாத்திற்கும் அவரது சகோதரருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அசாத் ரஷியாவில் உள்ளதால் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் உள்ளதாக சிரியா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/death-sentence-for-former-syrian-president




