பெங்களூரு, பெங்களூருவில் பிரதமர் மோடி பேசுவதுபோது போலி வீடியோ வெளியிட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யக்கூறி தொழில் அதிபரிடம் இருந்து ரூ.7.66 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 'டீப்பேக்' வீடியோ பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் பகுதியை சேர்ந்த 39 வயது தொழில் அதிபர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி முகநூலில் ஒரு வீடியோவை பார்த்தார். அதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தொழில் அதிபர் ஆனந்த் அம் பானி மற்றும் சுதா மூர்த்தி எம்.பி. ஆகியோர் ஆன்லைன் பங்குச்சந்தை முதலீடுகளை ஊக்குவித்து பேசுவது போல் வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் அது டீப்பேக் வீடியோ மூலம் போலியாக உருவாக்கப்பட்ட வீடியோ என்பதை அறி யாமல், உண்மை என நம்பிய தொழில் அதிபர், அதில் குறிப்பிடப்பட்டிருந்த லிங்க்கை கிளிக் செய்து உள்ளே சென்று, தனது செல்போன் எண்ணை பதிவு செய்தார். இதனை தொடர்ந்து, அவரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர்கள், தங்களை 'ஒன் டு மார்க் கெட்ஸ்' என்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் எனக்கூறி அறிமுகப்படுத்தி கொண்டனர். ரூ.7.66 லட்சம் மோசடி மேலும், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர். இதை நம்பிய தொழில் அதிபர், முதலில் ரூ.22 ஆயிரம் முதலீடு செய்தார். பின்னர், கடந்த செப்டம்பர் 22-ந் தேதி வரை தவணை முறை யில் மொத்தம் ரூ.7 லட்சத்து 66 ஆயிரம் வரை மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்குக ளுக்கு அனுப்பினார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் முதலீடு செய்த பணத்துக்கான லாபத் தொகை அதிகமாக காட்டியதால், அவற்றை எடுக்க தொழில் அதிபர் முயன்றார். ஆனால், அவரால் அவற்றை எடுக்க முடியவில்லை. இதுதொடர்பாக மர்ம நபர்களை தொடர்பு கொண்டு தொழில் அதிபர் கேட்டார். அப்போது, பணத்தை எடுக்க கட்டணமாக மேலும் பல லட்சம் ரூபாய் செலுத்துமாறு கூறினர். போலீசில் புகார் அப்போதுதான், தொழில் அதிபர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து, அவர் பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/businessman-defrauded-of-75-lakh-under-the-pretext-of-stock-market-investment




