சிக்மா - திரை விமர்சனம் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம். தனது அம்மாவின் ஆசைக்காக நூலகம் நடத்தி வரும் சந்திப் கிஷன் பல்வேறு கடன்களில் சிக்கி தவிக்கிறார். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் நூலகத்தை பறி கொடுக்கிறார். இந்த சூழலில் இருக்கும் பணத்தைக் கொண்டு சூதாடி லாபம் பெறலாம் என கிளப்புக்கு செல்லும் சந்திப் கிஷன், அந்த கிளப்பில் பணத்தை மோசடி செய்து வருவதை கண்டுபிடிக்கிறார். சந்தீப் கிஷன் இது தொடர்பான ஒரு பென்டிரைவும் அவருக்கு கிடைக்கிறது. இதனைத் தொடர்ந்து உரிமையாளரிடம் பணம் தந்தால் பென் டிரைவ் தருவதாக பேரம் பேசுகிறார். அந்த பென்டிரைவை கைப்பற்ற ஆந்திராவிலிருந்து சம்பத் படையெடுத்து வருகிறார். அப்படி அந்த பென் டிரைவில் என்ன இருக்கிறது? அந்த பென் டிரைவை தேடி ஒரு கும்பல் அலைந்து திரிய காரணம் என்ன? இதன் பின்னணியில் இருக்கும் பிரச்சினைகளை சந்தீப் கிஷன் சமாளித்தாரா? என்னதான் நடந்தது? என்பதே பரபரப்பான மீதி கதை. சிறப்பான நடிப்பு சந்தீப் கிஷன் வழக்கமான கலகலப்பான நடிப்பால் படம் முழுக்க அலங்கரிக்கிறார். தனது தாயின் கனவை நிறைவேற்ற அவர் படும் கஷ்டங்கள் எமோஷனலாக செட் ஆகிறது. இயல்பான நடிப்பால் படம் முழுக்க ரசிக்க வைக்கிறார். ஆக்சன் காட்சிகளிலும் அசத்துகிறார். அழகான கதாநாயகியாக வரும் பரியா அப்துல்லா ஓரளவு ஸ்கோர் செய்துள்ளார். சம்பத், ராஜூ சுந்தரம், ஷிப் பண்டிட், ஷீலா ராஜ்குமார் என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்கள். பரபரப்பான காட்சிகள் கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவில் காட்சிகள் மிரட்டல். தமன் இசை ஆட்டம் போட வைத்திருக்கிறது. பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம். லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம். வழக்கமான அடிதடி கதை என்றாலும் அதில் புதுமையான விஷயங்களை புகுத்தி, நேர்த்தியான திரைக்கதையில் காட்சிகளை கோர்த்து படம் முழுக்க பரபரப்புடன் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஜேசன் சஞ்சய். இடைவேளையும், கிளைமாக்ஸ் காட்சியும் பரபரப்பின் உச்சம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/movie-review/directorial-debut-how-is-jason-sanjays-sikma



