வாஷிங்டன், பிரபல அமெரிக்க பாடகியும் பாடலாசிரியருமான கேட்டி பெர்ரி, ஈரான் மீதான அமெரிக்க ராணுவ தாக்குதல்களின் வீடியோவில் தனது புகழ்பெற்ற 'பயர் ஒர்க்' பாடல் பயன்படுத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு தன்னிடம் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்றும், அதை தான் ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். என்னிடம் கேட்கவே இல்லை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய வீடியோவில், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் காட்சிகளுடன் கேட்டி பெர்ரியின் 2010-ம் ஆண்டு வெளியான 'பயர் ஒர்க்' பாடல் இணைக்கப்பட்டிருந்தது. இதற்கு கேட்டி பெர்ரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். என் பாடலின் நோக்கத்திற்கு எதிரானது இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "ராணுவத் தாக்குதல்களின் வீடியோ காட்சிகளுக்கு பின்னணி இசையாக 'பயர் ஒர்க்' பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டு நான் மிகுந்த அதிர்ச்சியை அடைந்தேன். இதற்கு நான் ஒப்புதலும் அளிக்கவில்லை. என்னிடம் அனுமதி கேட்கப்படவும் இல்லை. மக்களின் கடினமான தருணங்களில் நம்பிக்கை மற்றும் வலிமையை அளிக்கும் ஒரு கீதமாகவே இந்த பாடலை நான் எழுதினேன். இப்படி அழிவு மற்றும் வன்முறைக்கான பின்னணி இசையாக பயன்படுத்துவது, என் பாடல் உணர்த்தும் அனைத்திற்கும் எதிரானது" என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/katy-perry-lashes-out-of-us-president-trump-for-using-her-song-without-her-permission




