வயநாடு, கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா அருகே உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் சுப்பிரமணியன் (வயது 56). இவருக்கு, தனது நண்பர் மூலம் 55 வயது பெண் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டது. 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். பின்னர் நெருங்கி பழகி வந்தனர். இதையடுத்து சுப்பிரமணியன் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். இதனிடையே சுப்பிரமணியன் தன்னை வக்கீல் என்றும், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருவதாகவும் பெண்ணிடம் கூறியுள்ளார். ஆகவே, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பிய அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படு கிறது. மேலும் பெண்ணிடம் இருந்து 5 பவுன் நகையை சுப்பிரமணியன் தனது தேவைக்காக வாங்கி உள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி னார். அதற்கு சுப்பிரமணியன் காலம் தாழ்த்தி வந்தார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததோடு, அந்த பெண்ணுடன் பேசுவத்தை நிறுத்தி விட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண். இதுகுறித்து புல்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சுப்பிரமணி யன் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை பலாத்காரம் செய்ததோடு, 5 பவுன் நகையை பறித்து ஏமாற்றியது தெரியவந்தது. சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். பின்னவர் அவர் பத்தேரி கோரட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/government-employee-arrested-for-raping-woman-and-snatching-her-jewelry-under-the-pretext-of-marriage




