சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்ட விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சேத்தியாத்தோப்பு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. பருத்தி இங்கு சேத்தியாத்தோப்பு மட்டும் இன்றி குறியாமங்கலம், திட்டக்குடி, பெண்ணாடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர். அதன்படி நேற்று முன்தினம் சேத்தியாத்தோப்பு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் 270 டன் பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். இதனால் ஒரே நாளில் ரூ.2 கோடியே 42 லட் சத்திற்கு பருத்தி விற்பனையானது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை நன்கு உலர வைத்தும், சுத்தம் செய்தும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்பனை செய்து பயன்பெறலாம் என்று கடலூர் விற்பனைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/cuddalore-cotton-worth-24-crore-sold-in-a-single-day-at-the-regulated-market




