`பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் குமரன். இவர் பின் வெள்ளித்திரையிலும் தடம் பதித்தார். இவர் ̀குமார சம்பவம்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். வதந்தி வெப் சீரிஸில் இவருடைய நடிப்புக்கு ஏராளமான பாராட்டுகள் கிடைத்தன. இந்நிலையில் இவர் `பிக்பாஸ் தமிழ் சீசன் 10' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருந்தார். குமரன் ̀லீடர்ஸ் எக்சிட் லிஸ்ட் (Leader's Exit List)' என்கிற புதிய கான்செப்ட் மூலம் வீட்டின் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட லட்சுமி பிரியா மற்ற ஹவுஸ்மேட்ஸ்களால் நாமினேஷன் செய்யப்பட்டு கடந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேறினார். இந்த எக்சிட் லிஸ்ட் மூலம் வெளியேறிய மூன்று பேரை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த மூன்று நபர்கள் வீட்டிலுள்ள மூவரை தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்வு செய்யப்படும் மூவரும், வீட்டிலிருந்து வெளியேறி பின் வீட்டிற்குள் சென்ற மூவரும் போட்டியிட்டு இந்த வார இறுதியில் அவர்கள் ஆறு பேரிலிருந்து மூவர் வெளியேற வேண்டும். அந்த அடிப்படையில் லட்சுமி பிரியா குமரனை தேர்வு செய்தார். பிக்பாஸ் இறுதியில் வைக்கப்படும் பணப்பெட்டி இப்போது வைக்கப்பட்டு அந்த ஆறு பேரிலிருந்து ஒருவர் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து ஒருவர் வெளியேறலாம் என தெரிவிக்கப்பட்டது. 5லட்சம் பணப்பெட்டியை குமரன் எடுத்திருக்கிறார். மற்ற போட்டியாளர்கள் வேண்டாம் என தடுத்தும் குமரன் இந்த முடிவை எடுத்து வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பணப்பெட்டி குமரனுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருந்தது. அவர்கள் அனைவருக்கும் குமரனின் இந்த முடிவு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. `எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என்கிற டேக்கின் படி இந்த வாரம் மூன்று வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டிற்குள் செல்ல இருக்கிறார்கள். பிக்பாஸ் லான்ச் எபிசோடில் ரசிகர்கள் ஓட்டின் அடிப்படையில் வெளியேறிய சின்னத்திரை நடிகர் புவியரசன் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/television/biggboss-tamil-10-contestant-kumaran-walks-out-with-5-lakhs-money-box



