சென்னை, சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னையில் தொழிலதிபர் ஜெம் வீரமணி என்பவரால் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் வெளியாகி வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சிறுமிகள் சீரழிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இருந்தது தெரிந்திருந்தும் இந்த வழக்கின் குற்றவாளிகளை தப்பிக்கச் செய்வதற்கு கடந்த காலங்களில் முயற்சி செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. போக்சோ சிறப்பு நீதிமன்றம் குழந்தைகளை தெய்வமாகக் கொண்டாடுவது தான் தமிழர்களின் பண்பாடு ஆகும். ஆனால், குழந்தைகளின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதை ஆயுதமாகக் கொண்டு அவர்களை சமூகத்தில் பெரிய மனிதர்கள் போர்வையில் இருப்பவர்கள் சீரழிப்பதை சகித்துக் கொள்ள முடியாது. கடந்த பல பத்தாண்டுகளாகவே இந்தக் கொடுமை தொடர்ந்திருப்பதும், கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதியே இது குறித்து காவல்துறையில் ஆதாரங்கள் அளிக்கப்பட்ட போதிலும், தொடர் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக, போதிய ஆதாரங்கள் இல்லாததாகக் கூறி, அந்த வழக்கு கைவிட அனுமதி கோரி கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். விசாரணை அதை ஏற்க நீதிபதி மறுத்து விட்டதன் பயனாகத் தான் இந்த கொடுமையில் சம்பந்தப்பட்ட பலரும் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் சென்னை போக்சோ நீதிமன்றம் காட்டிய அக்கறையும், கடுமையும் பாராட்டத் தக்கவை. சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விசாரணையில் தெரியவரும் தகவல்களின் அடிப்படையில், தேவைப்பட்டால் போக்சோ வழக்கு பிரிவுகளை மாற்ற வேண்டும். சிறுமிகள் சீரழிக்கப்பட்டது மட்டுமின்றி, அதற்கு துணையாக இருந்தவர்கள், வழக்கிற்கு மூடுவிழா நடத்த முயன்றவர்கள் ஆகியோரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை வரம்பை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-abuse-of-young-girls-strict-punishment-must-be-secured-for-the-perpetrators-anbumani-urges




