ராணுவத் தாக்குதலிலிருந்து பொருளாதாரத் தாக்குதலுக்கு மாறியுள்ளது ஈரான் போர். அமெரிக்க அரசு ஈரானுக்கு எதிராக ‘Operation Economic Outcast’ என்கிற ஆபரேஷனைத் தொடங்கியுள்ளது. இதன்படி, ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ‘இரண்டாம் கட்ட’ வரிகள் பாயும். இந்த வலையில் தற்போது நான்கு இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் சிக்கியுள்ளன. அவை என்னென்ன நிறுவனங்கள்? அவற்றின் மீது அமெரிக்கா சொல்லும் குற்றச்சாட்டு என்ன? PORTEASE PARTNERS LLP (PORTEASE): ஈரானிய பெட்ரோ கெமிக்கல் பொருள்களை இந்தியாவில் இறக்குமதி செய்யப் பல சலுகைகளையும் உதவிகளையும் செய்துகொடுத்த இந்தியாவைச் சேர்ந்த சுங்கத் தரகு நிறுவனம் இது. ஈரான் கச்சா எண்ணெய்அமெரிக்க வரியால் வணிகங்களுக்கு பாதிப்பு; இதனால், அவற்றுக்கு $7.5 பில்லியன் கனட அரசு உதவி! SADASHIVA OVERSEAS: 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2025-ம் ஆண்டு ஜூன் வரை, அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து சுமார் 69 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானியக் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்த இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் இது. PP SOFTTECH: ஜனவரி 2024 முதல் ஜூன் 2025 வரை, சுமார் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானியக் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி செய்த இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் இது. PRAKRUTEES INFRA: 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் 2026-ம் ஆண்டு பிப்ரவரி வரை, அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கிட்டத்தட்ட 25 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானியக் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்த இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இது. இந்த நான்கு நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் தடைகள் என்னென்ன? இந்த நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் மீதான உரிமைகள் அமெரிக்காவில் இருந்தாலோ அல்லது அமெரிக்க நபர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலோ, அவை அனைத்தும் முடக்கப்படும். கச்சா எண்ணெய்கச்சா எண்ணெய் விலையில் அமெரிக்காவிற்கும், ட்ரம்பிற்கும் சறுக்கல்; ஓமன், ஈரானுக்கு சக்சஸ்? இந்தச் சொத்துகள் சார்ந்த பரிவர்த்தனை அமெரிக்காவிலோ, அமெரிக்கா சார்ந்த வழியிலோ நடந்தால், அவற்றிற்குத் தடை. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர்களைத் தடை செய்துள்ளது அமெரிக்கா. அவர்களுக்கு நிதி உள்ளிட்ட வகைகளில் உதவி செய்வதோ அல்லது அவர்களிடமிருந்து இந்த மாதிரியான உதவிகளைப் பெறுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/us-sanctions-four-indian-firms-over-iran-trade-links



