திருத்தணி, திருத்தணி முருகன் மலைக்கோவில் மேல் 14 நாட்கள் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் செப்டம்பர் 6, 7, 13, 14, 17, 20, 23, 24, 25, 27, 28, 30 ஆகிய நாட்களில் விழா மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பக்தர்களின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு மேற்கண்ட 14 நாட்களிலும் மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இடவசதிக்கு ஏற்ப கார்கள் மட்டும் மலைக்கோவிலுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் கட்டணமின்றி கோவில் பஸ்களில் பயணம் செய்யலாம். இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்ல அனுமதி உண்டு. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/autos-banned-from-entering-thirutani-murugan-temple-for-14-days




