கோவை, கோவையில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் நல்லாம்பள்ளி பகுதியில் உள்ள செடிகளுக்கு இன்று மதியம் லாரி மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டது. அப்போது, உடுமலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வேகமாக வந்த கார் நெடுஞ்சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த லாரி மீது பின்புறத்தில் இருந்து வேகமாக மோதியது. விபத்து - 5 பேர் பலி இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 3 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-car-crash-into-lorry-5-killed




