சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற "தாய்மாமன் தங்க மோதிரம்" வழங்கும் திட்டத்தை நிதி அமைச்சர் மரிய வில்சன் நேற்று தொடக்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``எண்ணம்போல் வாழ்க்கை என்பார்கள். மனிதனின் எண்ணத்தில் என்ன இருக்கிறதோ, அதுதான் வார்த்தைகளாக வெளியே வரும். பொதுமேடைகளில் உதயநிதி பேசும் பேச்சுக்கள் மூலம் அவருடைய எண்ணம் எப்படிப்பட்டது என்பதை நாம் பார்க்க முடிகிறது. இது ஏதோ ஒரு முறை நடந்ததல்ல; பல தருணங்களில் இதனைத் தமிழக மக்கள் நேரடியாகவே பார்த்திருக்கிறார்கள். தாராபுரத்தில் உதயநிதி மேடைகளில் பெண்களைப் பற்றியும், பெண்கள் சார்ந்த விஷயங்களைப் பற்றியும் அவதூறாகப் பேசுவது உதயநிதியின் DNA-ல் ஊறிப்போன ஒன்று. உதயநிதி என்பவர் ஒரு 'ஆபாச நதி'; அந்த ஆபாச நதி எப்போதும் ஓடிக்கொண்டேதான் இருக்கும். மேடைகளில் மற்றவர்களுக்குப் பட்டப்பெயர் சூட்டுவதை உதயநிதி வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். ஆனால், தொடர்ச்சியாகப் பெண்களைக் கேவலப்படுத்திப் பேசி வரும் அவருக்கு, இன்று தமிழக மக்களே 'ஆபாச நதி' என்று புதிய பட்டப்பெயரைச் சூட்டியுள்ளார்கள்" எனக் குறிப்பிட்டார். தாராபுரம்: "30 நிமிடங்களில் 32 முறை திமுக என்று பேசியிருக்கிறார் முதல்வர்" - உதயநிதி காட்டம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/minister-maria-wilson-has-criticized-the-remarks-made-by-opposition-leader-udhayanidhi




