பிரபல நடிகரும் சர்வதேசத் திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளருமான ரவீந்திரனை, மாநிலத் திரைப்பட அகாடமியின் புதிய தலைவராக கேரள அரசு நியமித்துள்ளது. 1980-களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் ரவீந்திரன். 1980-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஒரு தலை ராகம்’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தனது தனித்துவமான நடன அசைவுகளால் 'டிஸ்கோ ரவீந்திரன்' என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட இவர், பின்னர் திரைத்துறை சார்ந்த ஆய்வுகள் மற்றும் சர்வதேசத் திரைப்பட விழாக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். இது குறித்து ரவீந்திரன் கூறுகையில், "பப்பயுடே சொந்தம் அப்பூஸ் திரைப்படத்திற்குப் பிறகு, சினிமா துறையில் அடுத்தகட்டமாக வேறு என்ன செய்யலாம் என்று சிந்தித்தேன். சினிமா தொடர்பான கல்வியைப் பயிற்றுவிக்கத் தொடங்கினேன். பின்னர் திரைப்பட விழாக்களையே ஏன் நாம் பரவலாக நடத்தக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அதன்படி, கல்லூரி வளாகங்கள் தோறும் நேரில் சென்று மாணவர்களுக்குத் தரமான உலகத் திரைப்படங்களைத் திரையிட்டுக் காட்டினோம். கேரளாவில் மட்டுமே சுமார் 250 கல்லூரிகளுக்குச் சென்று சினிமாக்களைத் திரையிட்டிருக்கிறோம். கடந்த பத்து ஆண்டுகளாக மத்திய கிழக்கு நாடுகளில் தங்கி, அனைத்து வளைகுடா நாடுகளிலும் திரைப்பட விழாக்களை ஒருங்கிணைத்து நடத்தினேன். இதற்கிடையில், ‘இடுக்கி கோல்ட்’ போன்ற குறிப்பிட்ட சில திரைப்படங்களிலும் நடித்தேன். மலையாள திரைப்பட அகாடமி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரவீந்திரன் மாநிலத் திரைப்பட அகாடமியின் தலைவர் பதவியை எதிர்பார்த்தேன் என்பதை விட, அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று மனதார விரும்பினேன். திரைப்பட அகாடமி என்பது மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒரு களம். 2016-ம் ஆண்டுக்கு முன்பு அகாடமியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு. அப்போது காட்சி ஊடகக் கல்வி மற்றும் திரைப்பட எழுத்தறிவுக்கான கமிட்டியின் தலைவராகவும், பிலிம் மார்க்கெட் பொறுப்பாளராகவும் செயல்பட்டேன். அப்போது திரைப்படத்துறை சார்ந்த பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்த நினைத்திருந்தும், எதிர்பார்த்தபடி முழுமையாகச் செய்ய முடியவில்லை. அதனால் இப்பதவியை ஆவலுடன் எதிர்பார்த்தேன். டிஸ்கோ ரவீந்திரன் புதிய கமிட்டி பொறுப்பேற்பதற்கு முன்பே குறும்படம் மற்றும் ஆவணப்படங்களுக்கான திரைப்பட விழா வெற்றிகரமாகத் தொடங்கிவிட்டது. திரைப்பட அகாடமிக்குக்கு எனச் சிறந்ததொரு குழு செயல்பட்டு வருகிறது. தலைவர் என்ற முறையில் நான் சிறப்பாக வழிநடத்துவேன். அதேபோல், ஜனநாயகத்திலும் மதச்சார்பின்மையிலும் உறுதியான நம்பிக்கை கொண்ட அரசுதான் இங்குள்ளது. அரசின் கொள்கைகளுடன் முழுமையாக இணைந்து செயல்படுவேன். மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் சினிமாவை முறையாகக் கொண்டு சேர்க்கும் வகையிலான சிறந்த திரைப்பட எழுத்தறிவுத் திட்டத்தை உருவாக்குவேன். மலையாளத் திரைப்படங்களை அதிகளவில் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்குக் கொண்டு செல்ல தீவிர முயற்சி எடுக்கப்படும். இதற்காகப் புதியதொரு மார்க்கெட்டிங் கட்டமைப்பைக் கண்டறிய வேண்டும். வெளிநாட்டுத் திரைப்படங்களை இங்கு கொண்டு வந்து காட்சிப்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல், தென்னிந்தியத் திரைப்படங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து நமது படங்களை உலகளவில் சந்தைப்படுத்துவதற்கான சர்வதேசத் தளத்தை உருவாக்குவதே எனது முக்கிய இலக்கு" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/actor-disco-raveendhran-selected-as-film-academy-president-of-keralam




