நெல்லை, நெல்லையில் இந்து மதக்கடவுள் விநாயகர் பிரியாணி சமைப்பது போன்று ஓட்டலில் விளம்பர பேனர் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வி.எம்.சத்திரத்தில் அசைவ ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் இந்து மதப்பண்டிகையான விநாயகர் சதுர்த்தி பண்டிகையொட்டி அரபிக் ஸ்டைல் சிக்கன் பிரியாணி சலுகை விலையில் வழங்கப்படுவதாக விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. விநாயகர் பிரியாணி சமைப்பது போன்று வைக்கப்பட்ட விளம்பர பேனர் அந்த விளம்பர பேனரில் இந்து மதக்கடவுள் விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. இந்த விளம்பரம் இந்து மதத்தினரின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரியாணி கடையில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றினர். அதேவேளை, ஓட்டல் உரிமையாளர் வேற்று மதத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியான நிலையில் அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-shock-over-vinayagar-biryani-ad-banner




