வாஷிங்டன், பிரபல ஹாலிவுட் நடிகையும், தயாரிப்பாளருமான ஜெனிபர் லாரன்ஸ்(வயது 36), சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்கியுள்ளார். அவர் வெளியிட்ட முதல் பதிவிலேயே, மோசமான கமெண்ட்டுகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெனிபர் லாரன்ஸ் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் ‘எக்ஸ் மென்’ திரைப்படங்களில் ‘மிஸ்டிக்’(Mystique) என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். மேலும் ‘தி ஹங்கர் கேம்ஸ்’, ‘அமெரிக்கன் ஹசில்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர், 2012-ம் ஆண்டு வெளியான ‘சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்’ திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருது வென்றார். இன்ஸ்டாகிராம் தற்போது ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் ஜெனிபர் லாரன்ஸ், சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், முதல் முறையாக நடிகை ஜெனிபர் லாரன்ஸ் இன்ஸ்டாகிராமில் அடியெடுத்து வைத்துள்ளார். அதோடு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். குழந்தையை பாதிக்கும் அந்த வீடியோவில், “ஒருவழியாக இதை முயற்சி செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன். யாராவது ஏதேவது தப்பாக பேசினால், யோசிக்காமல் இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறி விடுவேன். எந்த கேள்வியும் கிடையாது. எனவே மோசமான கமெண்ட்டுகள் வேண்டாம். அது குழந்தையை பாதிக்கும். நான்தான் அந்த குழந்தை” என்று தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமுக்கு வந்த ஜெனிபருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். தற்போதுவரை அவரது கணக்கை சுமார் 56 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/hollywood-actress-makes-her-instagram-debut-ill-leave-if-theres-inappropriate-talk-a-warning-in-her-very-first-post




