தர்மபுரி, நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்த நிலையில் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. ஒகேனக்கல் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். குறிப்பாக விடுமுறை நாட்களில் வழக்கத்துக்கு மாறாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்போது சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் செய்யவும் தடை விதிக்கப்படும். நீர்வரத்து குறைந்தவுடன் மீண்டும் பரிசல் இயக்க மற்றும் குளிக்க அனுமதி அளிக்கப்படும். தடை இந்த நிலையில் கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் கடந்த 12-ந்தேதி தடை விதித்து இருந்தது. பரிசல் இயக்க அனுமதி இந்நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்புகளில் மழையின் அளவு குறைந்தது. நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் நீர்வரத்து காணப்பட்டது. இன்று காலையில் இந்த நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதையடுத்து ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி அளித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணன் உத்தரவிட்டு உள்ளார். சுற்றுலா பயணிகள் உற்சாகம் இதன் காரணமாக 13 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் இன்று மீண்டும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். அதேபோல் மெயின் அருவி மற்றும் காவிரி கரையோரத்திலும் உற்சாகமாக குளித்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/water-flow-drops-to-5000-cusecs-coracle-services-resume-in-hogenakkal




