புதுடெல்லி, அமெரிக்கா உடனான போருக்கு மத்தியில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன். பிரிக்ஸ் அமைப்பில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கடந்த 2024ம் ஆண்டில் முழு உறுப்பினர்களாக இணைந்தன. இதனைத் தொடர்ந்து, 2025ம் ஆண்டில் இந்தோனேசியாவும் இணைந்ததால் முழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு, 'மீள்தன்மை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு' என்ற கருப்பொருளின் கீழ் டெல்லியில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஈரான் அதிபர் பெஷெஷ்கியான் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வருகையின்போது இரு நாடுகளின் உறவு மற்றும் போர்நிறுத்தம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் நடந்த வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி இந்தியா வருகை தந்தார். அப்போது, அமெரிக்காவுடனான போர்நிறுத்த விவகாரத்தில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என கூறி அவர், ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து தொடர்பாக உறுதியும் வழங்கினார். இப்படி ஒரு சூழலில், இந்தியா வர உள்ள ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், அமெரிக்கா உடனான போரை நிறுத்த இந்தியாவிடம், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பின் போது, அவர் உதவி கோருவாரா என்ற எதிர்பார்ப்பு உலக தலைவர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஈரான்-அமெரிக்கா இடையேயான மத்தியஸ்தத்தில் தன்னை ஒரு அங்கமாக காட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் அந்த பட்டியலில் பாகிஸ்தானை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிடவில்லை. மேற்கு ஆசியாவில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தொடரும் மோதல் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில், பெஷெஷ்கியனின் புதுடெல்லி பயணம் அமைந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/iranian-president-to-visit-india




