"கையில் ₹1 கோடி ரூபாய் இருக்கிறது. இதில் எவ்வளவு தொகையை ஈக்விட்டி (Equity)-யில் போடுவது? எவ்வளவு தொகையை டெப்ட் (Debt)-ல் ஒதுக்குவது?" 40 வயதைத் தாண்டிய பல முதலீட்டாளர்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் (NRI) கேட்கும் முதன்மையான கேள்வி இது. கேள்வி நியாயமானதுதான். ஆனால், இதற்கு விடை தேடுவதற்கு முன், நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது: "இந்த ₹1 கோடி மட்டும்தான் என்னுடைய மொத்த செல்வமா?" ஏனெனில், உங்களிடம் ஏற்கெனவே சொந்த வீடு இருக்கலாம்; வங்கியில் ₹20 லட்சம் ஃபிக்சட் டெபாசிட் (FD) இருக்கலாம்; தங்கம், EPF, இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்டுகள் எனப் பல வடிவங்களில் சேமிப்பு இருக்கலாம். வெளிநாட்டில் வாழும் NRI என்றால், நீங்கள் இருக்கும் நாட்டிலும் சேமிப்பு அல்லது ஓய்வூதிய முதலீடுகள் (Retirement Savings) இருக்கலாம். இவை அனைத்தையும் சேர்த்துப் பார்ப்பதுதான் உங்கள் உண்மையான 'போர்ட்ஃபோலியோ' (Portfolio). எனவே, அசெட் அலொகேஷன் (Asset Allocation) என்பது, புதிதாக கையில் கிடைக்கும் ₹1 கோடியை மட்டும் பிரிப்பது அல்ல; உங்களிடம் ஏற்கெனவே இருக்கும் சொத்துகளையும் கணக்கில் கொண்டு, உங்கள் பணத்தை எந்தெந்த இலக்குகளுக்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும் எனத் திட்டமிடுவதுதான்! பக்கெட் உத்தி - bucket strategy பணத்தை 3 "பக்கெட்டுகளாக" (Buckets) பிரியுங்கள்! உங்கள் முதலீட்டைத் தொடங்குவதற்கு முன், பணத்தை மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிப்பது தெளிவைத் தரும்: உடனடித் தேவைக்கான பணம் (Short-term Bucket): அடுத்த 1 முதல் 3 ஆண்டுகளில் தேவைப்படக்கூடிய தொகை. இதில் ஏற்ற இறக்கங்கள் (Volatility) இருக்கக் கூடாது; தேவைப்படும்போது உடனடியாக எடுக்கும் வகையில் பாதுகாப்புக்கு முதன்மைத் தர வேண்டும். நடுத்தர காலப் பணம் (Mid-term Bucket): அடுத்த 3 முதல் 7 ஆண்டுகளில் வரக்கூடிய இலக்குகள். பிள்ளைகளின் உயர்கல்வி, வீடு புதுப்பித்தல் அல்லது பெரிய குடும்பச் செலவுகளுக்கான தொகை. நீண்ட காலப் பணம் (Long-term Bucket): அடுத்த 7 ஆண்டுகளுக்குத் தேவையில்லாத பணம். இங்கே சந்தையின் ஏற்ற இறக்கங்களைத் தாங்கி, பணவீக்கத்தை அடித்து நொறுக்கும் வளர்ச்சியைப் (Growth) பெறுவதே முதன்மை நோக்கம். உதாரணம்: 45 வயதான ஒரு NRI முதலீட்டாளரிடம் ₹1 கோடி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவர் தனது போர்ட்ஃபோலியோவை இவ்வாறு திட்டமிடலாம்: ₹50 லட்சம் – வளர்ச்சி (Growth): நீண்டகால ஈக்விட்டி / மியூச்சுவல் ஃபண்டுகள். ₹20 லட்சம் – ஸ்திரத்தன்மை (Stability): டெப்ட் ஃபண்டுகள் / ஃபிக்சட் டெபாசிட் (பாதுகாப்புக்காக). ₹20 லட்சம் – எதிர்கால வருமானம் (Future Income): ஓய்வுகாலத் தேவைகளுக்கான திட்டம் - சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம், கார்ப்பரேட் பாண்ட்ஸ் etc. ₹10 லட்சம் – அவசரத் தேவை & வாய்ப்புகள் (Liquid Fund): அவசரச் செலவுகள் மற்றும் சந்தை சரியும்போது முதலீடு செய்ய. (குறிப்பு: இது ஒரு மாதிரிக்காக மட்டுமே! உங்கள் வயது, குடும்பச் சூழல், வருமான பாதுகாப்பு, ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் ஏற்கெனவே உள்ள சொத்துகளைப் பொறுத்து இந்த விகிதங்கள் மாறுபடும்.) முதலீடு NRI-கள் கவனிக்க வேண்டிய விஷயம்! இந்தியாவில் இருக்கும் ₹1 கோடியை மட்டும் தனித்துப் பார்த்து முடிவெடுக்காதீர்கள். நீங்கள் வாழும் நாட்டில் இருக்கும் முதலீடுகள் + இந்திய வங்கி ஃபிக்சட் டெபாசிட் + தங்கம் + EPF + மியூச்சுவல் ஃபண்டுகள் + ரியல் எஸ்டேட் - இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு 'எக்செல் ஷீட்டில்' கொண்டு வாருங்கள். அப்போதுதான் உங்கள் உண்மையான 'ரிஸ்க் அளவும்' (Risk Profile), சரியாகச் செய்ய வேண்டிய 'அசெட் அலொகேஷனும்' புரியும். உங்கள் போர்ட்ஃபோலியோவைச் சரிபார்க்க 5 கேள்விகள்: முதலீட்டைத் தொடங்குவதற்கு முன், இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் தெளிவான பதில் இருக்க வேண்டும்: அடுத்த 3 ஆண்டுகளில் எனக்கு எவ்வளவு பணம் உடனடியாகத் தேவைப்படும்? முதலீட்டில் இருந்து எப்போது ரெகுலர் வருமானம் (Regular Income) தேவைப்படும்? சந்தை சரிந்து, ஈக்விட்டி முதலீட்டின் மதிப்பு 20–30% குறைந்தால் மனரீதியாக என்னால் தாங்க முடியுமா? ஏற்கெனவே என்னிடம் எவ்வளவு ரியல் எஸ்டேட், FD மற்றும் தங்கம் உள்ளது? வெளிநாட்டிலும் இந்தியாவிலும் சேர்த்து எனது மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு? இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரியாமல், "எந்த மியூச்சுவல் ஃபண்ட் பெஸ்ட்?" என்று தேடத் தொடங்குவது, செல்ல வேண்டிய இடம் (Destination) தெரியாமல் பஸ் டிக்கெட் எடுப்பதற்குச் சமம்! ₹1 கோடி கையில் வைத்திருப்பது 'செல்வம்' (Wealth). அதைச் சரியான நோக்கங்களுக்காகச் சரியாகப் பிரித்து முதலீடு செய்வதுதான் உண்மையான 'நிதித் திட்டமிடல்' (Financial Planning)! உங்களுடைய முதலீட்டை சரியாக அசெட் அலோகேஷன் செய்ய வேண்டுமா? எப்படிச் செய்யலாம்? எப்படி ரீபேலன்ஸ் பண்ணலாம்? தெரிந்துகொள்ள NRI-களுக்கான சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி. வரும் சனி, செப் 26 மதியம் 12:30 மணிக்கு (இந்திய நேரம்) நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு/முன்பதிவு செய்ய: Personal Finance: 5 ஆண்டுகளுக்கு மேல் யோசிக்கத் தெரியாதவர்களா நாம்? ஷேர் மார்கெட்டும் பொறுமையும் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/personal-finance/what-is-the-right-asset-allocation-for-1-crore-portfolio




