சென்னை, இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை நடைபெறுவதாக இருந்த தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வெற்றிப்பயணத் திட்டம் தமிழகத்தில் மகளிர் பயணம் என்ற பெயரில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக செல்லும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 2-ந்தேதி முதல் இந்த திட்டம் 'வெற்றிப்பயணம்' என்ற பெயரில் விரி வுபடுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். அதன்படி மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் மற்றும் புறநகர் சாதாரண அரசு பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய சாதாரண அரசு பஸ்களிலும் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்கள் பாதிப்பு அரசின் இந்த இலவச பயண திட்டத்தால் தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு தனி யார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளன தலை வர் கே.தங்கராஜ், பொதுச்செயலாளர் டி.ஆர்.தர்மராஜ் ஆகி யோர் கூட்டாக நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, அவர்கள் கூறுகையில், தமிழக அரசு அறிவித்துள்ள 'வெற்றிப்பயண' திட்டத்தால் மாநகர, நகர மற்றும் சாதாரண புறநகர் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிப்பார்கள். இதன்மூலம், தனியார் பஸ்கள் நஷ்டம் அடைந்து மேற்கொண்டு இயக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மேலும், இத்தொழிலை சார்ந்துள்ள 3 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும். அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இலவச மகளிர் பயணத் திட்டத்திற்காக அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. எனவே, தனியார் பஸ்களிலும் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும். அதற்கு நஷ்டஈடாக தனியாருக்கும் மானியம் வழங்க வேண்டும். வேலை நிறுத்தம் தனியார் பஸ் தொழிலை காப்பாற்றும் வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்தியும், மகளிர் இலவச பயணத்தை எங்களுக்கும் விரிவுபடுத்தி மாற்றியமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி நாளை (புதன்கிழமை) ஒரு நாள் கவன ஈர்ப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை இந்த வேலை நிறுத்தம் நடைபெறும். எனவே நாளை தனியார் பஸ்கள் ஓடாது என்று தெரிவித்து இருந்தனர். வாபஸ் இந்த நிலையில், இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை நடைபெறுவதாக இருந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் நேற்று நடைபெற்ற எங்களது பேட்டி மற்றும் எங்களது கோரிக்கைகளை தங்களது ஊடக வாயிலாக பொது மக்களுக்கு கொண்டு சென்றமைக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசின் வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் தொடர்பு கொண்டு எங்களது முக்கிய கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்த வகையில் நாளை நாங்கள் அறிவித்துள்ள கவன ஈர்ப்பு ஒரு நாள் வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பது என்று முடிவு செய்துள்ளோம். மேலும் நாளை வழக்கம்போல் தனியார் பஸ்கள் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/private-bus-strike-in-tamil-nadu-called-off




