சென்னை, அடையாறு முகத்துவாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆய்வு வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, அடையாறு முகத்துவாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஜி.ஆர்.இராதாகிருஷ்ணா, மண்டல அலுவலர் என்.காளிதாஸ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து, வடகிழக்குப் பருமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆணையாளர் தெரிவித்ததாவது:- வண்டல்கள் தூர்வாரும் பணிகள் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 1,683 கி.மீ. நீளத்திலான மழைநீர் வடிகால்களில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 1,102 கி.மீ. நீளத்தில் உள்ள மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1,10,211 வண்டல் வடிகட்டி தொட்டிகளில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள் முதற்கட்டமாக முழுவதும் முடிக்கப்பட்டு, இரண்டாம் கட்டமாக இதுவரை 65,076 வண்டல் வடிகட்டி தொட்டிகளில் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும், 922 மீ. நீளத்தில் 105 விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 37 இடங்களில் முடிக்கப்பட்டுள்ளது. 68 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி மாநகராட்சியின் சார்பில் பராமரிக்கப்படும் 44 நீர்வழிக்கால்வாய்கள், நீர்வளத்துறையின் சார்பில் பராமரிக்கப்படும் 13 கால்வாய்கள் மற்றும் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் உள்ளிட்ட ஆறுகளில் மழைநீர் சீராக செல்லும் வகையில் ஆகாயத்தாமரைகளை அகற்றி வண்டல் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 28 ரெயில்வே சிறு பாலங்களின் உள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 6 கால்வாய்களில் தூர்வாரப்பட்டுள்ளது. குளங்களில் மேம்பாட்டு பணிகள் கேப்டன் காட்டன், செகரடரியேட் காலனி கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய்களில் 8,439 மீ. நீளத்தில் மேம்பாட்டு பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு, 6,977 மீ. நீளத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 83 குளங்களில் மேம்பாட்டு பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு, 51 குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. 32 குளங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மோட்டார் பம்புகள் மாநகராட்சியின் 19 சுரங்கப்பாதைகள், நெடுஞ்சாலைத்துறையின் 5 சுரங்கப்பாதைகளில் மழையினால் தேங்கும் நீரினை உடனடியாக வெளியேற்றும் வகையில் மோட்டார் பம்புகள் நிறுவப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரூ.100 கோடி ஒதுக்கீடு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 256 படகுகள் தயார்நிலை 109 மோட்டார் பம்புடன் கூடிய நீர் சேகரிப்பு தொட்டிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 3 நீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும். மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அவசரகால மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக மாநகராட்சியின் 36 படகுகளும், மீன்வளத்துறையின் 256 படகுகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 1320 மோட்டார் பம்புகள் சென்னை மாநகராட்சியில் தேங்கும் மழைநீரை வெளியேற்றிடும் வகையில் 650 டீசல் மற்றும் மின்மோட்டார்களும், வாடகை அடிப்படையில் 100 எச்.பி மோட்டார்கள் 500 மற்றும் 100 எச்.பி திறனுக்கும் மேலான மோட்டார்கள் 170 என 670 மோட்டார்கள் என மொத்தம் 1320 மோட்டார் பம்புகள் வடகிழக்குப் பருவமழை காலத்தில் பயன்படுத்தப்பட்டு தேங்கும் மழைநீரை அகற்றிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 215 நிவாரண மையங்கள் 215 நிவாரண மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு, அங்கு தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் வகையில் 111 மைய சமையல் கூடங்களும் தயார்நிலையில் உள்ளன. அறுந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின்கம்பிகள், மின்கேபிள்கள் சீரமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் மின்பெட்டிகளை உயர்த்தி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழையின் காரணமாக விழும் நிலையில் உள்ள ஆபத்தான மரங்களின் கிளைகள் கத்தரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. 01.01.2026 முதல் 21.09.2026 வரை 60,141 மரங்களின் கிளைகள் கத்தரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 2 ஆம்பிபியன், 3 மினி ஆம்பிபியன், 6 ரொபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் இயந்திரங்கள், 3 ஆம்பிபியஸ் எஸ்கவேட்டர் இயந்திரங்கள், 7 ரீசைக்ளர் வாகனங்கள், 15 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள், லாரியில் பொருத்தப்பட்ட 10 கிரேன்கள், 5 ஹைட்ராலிக் ஏணிகள், 6 ஜே.சி.பி. இயந்திரங்கள், 7 ஹைட்ராலிக் எஸ்கவேட்டர் இயந்திரங்கள், 60 ஸ்கிட் ஸ்டீயர் லோடர்கள்தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகள் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக தன்னார்வலர்கள் பதிவுசெய்யும் செயலி உருவாக்கப்பட்டு, தற்போது பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைமையிடம் மற்றும் 3 வட்டார அலுவலங்களிலும் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1913 உதவி எண் பொதுமக்களிடமிருந்து குறைகள்/புகார்களை பெறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சியின் 1913 உதவி எண் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் 7 நாட்களும் செயல்படும். 1913 உதவி எண் மற்றும் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக புகார்கள் பெறப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-municipal-commissioner-review




