சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-காவிரி பிரச்சினையில் தி.மு.க. தமிழ்நாட்டு மக் களுக்கு முழு துரோகம் செய்து விட்டது. இன்று காவிரி பிரச்சினை இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு சென்றதற்கு தி.மு.க.தான் காரணம்.1970-ம் ஆண்டு சட்டப்பேரவையில், ஹேமாவதி அணை கட்டுவதற்கு தமி ழகத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறப்பட்டது. அதன் பின்னர்தான் ஹேமாவதி, கபினி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகளை கர்நாடகா கட்டியது. தி.மு.க. தவறுகளைச் செய்தது 1971-ம் ஆண்டு அரசியல் சட்டத்தின் 131-வது பிரிவின் கீழ், காவிரி உரி மையை வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, முன்னால் முதல்-அமைச்சர் கருணாநிதியால் யாரிடமும் ஆலோசிக்காமல் திரும்பப் பெறப்பட்டது. 1974-ம் ஆண்டு காலாவதியான 50 ஆண்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இவ்வாறு காவிரி விவகாரத்தில் தி.மு.க. பல தவ றுகளைச் செய்துள்ளது. 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியான பிறகும். அதை மத்திய அரசிதழில் வெளியிட முடியவில்லை. அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சியில் இருந்த போதிலும் தி.மு.க. அதனை நிறைவேற்றவில்லை. உரிமை பறிபோனது பின்னர் 2013-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடு மையாகப் போராடி, சுப்ரீம் கோர்ட்டை அணுகி, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தார். தி.மு.க.வும், அந்த குடும்பமும் பெங்களூருவில் தாங்கள் வாங்கியுள்ள சொத்தை காப்பாற்றுவதற்காக காவிரி விஷயத்தில் சரணடைந்தனர்.அதனால் நமது உரிமை பறிபோனது. காவிரி விவகாரத்தில் தி.மு.க. செய்த அனைத்து தவறுகளுக்கும் துரைமுருகனே சாட்சி. அவருக்கு அனைத்தும் தெரியும். ஆனால் உண்மைகளை மறைத்து இப்போது பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-betrayed-the-people-of-tamil-nadu-on-the-cauvery-issue-minister-nirmal-kumars-allegation




