சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இயல்பைவிட அதிக மழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை வருகிற அக்டோபர் 20-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை தீவிரமாக இருக்கும். இதில் நவம்பர் மாதம் பிரதான மழை மாதமாக அமையும். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 44 செ.மீ. மழை பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, இந்த ஆண்டு 50 முதல் 60 செ.மீ. வரை மழை பதிவாகக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chance-of-more-than-normal-rainfall-private-meteorologists-information-on-the-northeast-monsoon




