ஐதராபாத், ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் பழகி, 27 வயது இளம் வழக்கறிஞர் ஒருவரிடம் இருந்து சுமார் 5 கோடி ரூபாய் வரை பிளாக்மெயில் செய்து பறித்த அதிர்ச்சி சம்பவம் ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது. வலைவீசிய போலி 'திஷா' ஐதராபாத்தின் ஹைடெக் சிட்டி பகுதியில் வசிக்கும் 27 வயது வழக்கறிஞருக்கு, கடந்த ஆகஸ்ட் 2025-ல் ஆன்லைன் டேட்டிங் ஆப் ஒன்றின் மூலம் ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர் தன்னை "திஷா" என்றும், ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையேயான ஆன்லைன் உரையாடல் மிகவும் நெருக்கமான அந்தரங்க அரட்டைகளாக மாறியுள்ளது. தொடர் மிரட்டலும் பணம் பறிப்பும் ஆரம்பத்தில் அவசரத் தேவை எனக் கூறி, அந்த நபர் வழக்கறிஞரிடம் பணம் வாங்கியுள்ளார். இதையடுத்து வழக்கறிஞரின் அந்தரங்க விவரங்களைச் சேகரித்த அந்த நபர், அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாகவும், குடும்பத்தினருக்கு அனுப்பிவிடுவதாகவும் கூறி மிரட்டத் தொடங்கியுள்ளார். மேலும், "ஒரு கட்டத்தில் அந்த நபர் தான் திருநங்கை சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், தனது உண்மையான பெயர் 'அலினா' என்றும் கூறி தொடர் மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு அஞ்சிய வழக்கறிஞர், கடந்த ஆகஸ்ட் 2025-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 2026-ம் ஆண்டு வரையிலான ஓராண்டு காலத்தில் சுமார் 241 தவணைகளாக சுமார் ரூ.4,91,48,900 வரை அந்த மோசடி கும்பலின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார். நேரில் வந்து வாங்கிய ரூ.77 லட்சம் வழக்கறிஞர், இடையில் அந்த எண்ணை 'பிளாக்' செய்துள்ளார். இருப்பினும், கடந்த ஜூலை 2026-ல் மீண்டும் அவரைத் தொடர்பு கொண்ட மோசடி கும்பல் மிரட்டலைத் தீவிரப்படுத்தியது. குறிப்பாக, கடந்த சில வாரங்களில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது. அதில், இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் கச்சிபவுலி பகுதியில் வைத்து ரூ.77 லட்சத்தை ரொக்கப் பணமாக மோசடி கும்பலின் ஆட்களிடம் வழக்கறிஞர் நேரில் ஒப்படைத்துள்ளார். போலீசில் புகார் மிரட்டல் எல்லை மீறியதைத் தொடர்ந்து, வேறு வழியின்றி பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் கடந்த 19-ந்தேதி அன்று தேசிய சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த மோசடியின் பின்னணியில் ஒரு பெரிய திட்டமிட்ட நெட்வொர்க் இருக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் சந்தேகிக்கின்றனர். இணையப் பக்கங்களில் அறிமுகமில்லாத நபர்களிடம் பழகும் போதும், தனிப்பட்ட விவரங்களை பகிரும் போதும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/gang-swindles-5-crore-from-lawyer-by-posing-as-a-woman-on-a-dating-app




