சென்னை, 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளித் திறக்கும் நாள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாணவர்களுக்கு ஆலோசனை தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 16-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெறுகின்றது. அதனைத் தொடர்ந்து அனைத்து வகை பள்ளிகளுக்கும் செப்டம்பர் 26-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் மாணவர்கள் வினா தாள்களுக்கான விடைகளை எழுதி (Assignment) வரவும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடமாக படிக்கும் வகையில் பாட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறை மேலும் அனைத்து பள்ளிகளிலும் திறக்கும் நாளன்றே மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கிட தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள் மற்றும் பாடக்குறிப்பேடுகள் வழங்கும் நாளன்று தலைமையாசிரியர்கள் பெற்று பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பள்ளி திறக்கும் நாளன்றே முதல் பாட வேளையில் மாணவர்கள் அனைவருக்கும் வழங்கிட உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுத் தேர்வு எழுதவிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விடுமுறை நாட்களில் தொடர் பயிற்சியை மேற்கொள்ள பாட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்நிலையில் விடுமுறை நாட்கள் தொடர்பாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை உறுதி செய்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பு இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் துவக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் காலாண்டுத்தேர்வு விடுமுறை 26.09.2026 முதல் 04.10.2026 வரை எனத் தெரிவிக்கப்பட்டு 05.10.2026 திங்கட்கிழமை அன்று அனைத்துவகைப் பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளித் திறக்கும் நாள் அன்று 1 முதல் 7 வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடநூல் வழங்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிகள் திறக்கும் நாளன்று அனைத்து மாணவர்களுக்கும் விடைத்தாள்களை வழங்கி மதிப்பெண்களை உரிய பதிவேடுகளில் / EMIS-ல் பதிவு செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விஜயதசமி அன்று அரசு, அரசு உதவி பெறும் துவக்க / நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கை நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தங்கள் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விவரங்களை EMIS கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் பள்ளியினால் உள்ளீடு செய்திடுமாறும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/quarterly-exam-holidays-when-will-schools-reopen-key-announcement-released




