தினமும் கண்களுக்கு மை இட்டுக்கொள்வதில் தவறில்லை. இருப்பினும், வீட்டில் இருக்கும் நேரம், விடுமுறை நாள்கள் போன்ற சமயங்களில் கண்களுக்கு மையிடுவதைத் தவிர்க்கலாம். நீண்ட நேரம் அழியாமல் இருக்கக்கூடிய நீர்ப்புகா கண் மை, கண் இமைகளுக்கான அழகு மை போன்றவற்றை தினமும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கண்களில் நீண்ட நேரம் அழகு மை இருப்பதால் சிலருக்கு கண் சிவத்தல், வீக்கம், எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். கண்களுக்கான அழகுப் பொருள்களைத் தேர்ந்தெடுக்கும்போது அதிக கவனம் தேவை. கண்கள் மிகவும் உணர்திறன் கொண்ட பகுதி என்பதால், விலை குறைவாக உள்ளது என்பதற்காகத் தரமில்லாத பொருள்களை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. கண் மை, கண் இமைகளுக்கான அழகு மை போன்றவற்றை வாங்கும்போது தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் நாள் ஆகியவற்றை நிச்சயமாகக் கவனிக்க வேண்டும். ஒருவருக்குப் பயன்படுத்திய கண் மை, காஜல் போன்ற கண்களுக்கான அழகுப் பொருள்களை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது. இதனால் கண் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். மாம்பழம், கேரட், பூசணிக்காய் போன்ற உணவுகளைச் சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளலாம். கண்களில் தொடர்ந்து சிவத்தல், வீக்கம், அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்பட்டால் அழகு மை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு கண் மருத்துவரை அணுக வேண்டும். “முதலுதவி அறிவோம், உயிர்களைக் காப்போம்!” முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/is-it-safe-to-apply-kohl-daily-8-key-things-to-know




