நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் இதற்கு தொடர்புடைய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் உள்படபலரும் பங்கேற்றனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். தமிழ்நாட்டிலும் ஆதரவு வலுத்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டம் தொடங்கி 36 நாள்களுக்குப் பிறகு, ஜூலை 25 ஆம் தேதியில் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய போது மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அமைச்சர் ராஜ்மோகன் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி” என்று பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-has-dropped-the-cases-against-students-who-protested-against-the-neet-exam




