பிரபல தொழிலதிபர் வீரமணி மீதான பாலியல் வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மூலம் சீரழித்த குற்றத்துக்காக வீரமணி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வீரமணிக்கு துணை போனதாக சாந்தி என்ற பெண்ணும், அவரது கணவர் மகேந்திர சிம்கன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.2003-ம் ஆண்டில் இருந்து சுமார் 23 ஆண்டுகள் வீரமணியின் பாலியல் விளையாட்டுகள் தொடர்ந்து நடந்துள்ளது. வீரமணி தொடர்பான ஆபாச வீடியோக்கள் அவரது உதவியாளராக இருந்த கணேசன் என்பவரின் செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் புகார் அளித்த போது முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடங்கி உள்ளது.அந்தவகையில், இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி எந்த தகவலையும் கண்டறிய முடியவில்லை என கோர்ட்டில் இறுதி அறிக்கை அளித்த விசாரணை அதிகாரிகளான விபசார தடுப்புப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த யாஸ்மின், இன்ஸ்பெக்டர்கள் மகேஷ்குமார், ராஜலட்சுமி ஆகியோர் மீதும், இந்த புகார் தொடர்பான விசாரணையை முறையாக மேற்பார்வையிடாத அப்போதைய சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கண்ணன், போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் மீதும் நடவடிக்கை பாய்ந்தது. அருண், யாஷ்மின் ஆகியோர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இந்த வழக்கில் இருந்து தொழில் அதிபர் வீரமணியை காப்பாற்றுவதற் காக போலீஸ் துறையை சேர்ந்தவர்களும், அரசியல் புள்ளிகளும், இடைத்தரகர்களும் வீரமணியிடம் இருந்து ரூ.70 கோடி பணத்தை வாங்கி யதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீரமணியின் டைரியில் அவர் யார்? யாருக்கு? எவ்வளவு பணம் கொடுத்தார் என்ற தகவல் உள்ளது. வீரமணி இதுபற்றிய அதிர்ச்சியான தகவல்களை போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். 'என்னிடம் பணத்தைவாங்கி, என்னை சிறைக்கு அனுப்பிவிட்டார்களே' என்று சிறை அதிகாரிகளிடமும் அவர் வேதனையாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை பொறுத்தமட்டில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு எதிரான பாலியல் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. ஐஜி தேன்மொழி தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் குழுவில் நான்கு பெண் போலீஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/gem-veeramani-sexual-assault-case-tamil-nadu-government-orders-formation-of-a-special-investigation-team



